வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நாடார் ஐம்பெரும் பள்ளி வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழாவும், காளியம்மன் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழாவும் விமரிசையாக நடந்தது. நாடார் உறவின்முறை தலைவர் தலைவர் முத்துராஜ் தலைமை வகித்தார். அதிகாலையில் விநாயகருக்கு அனுக்ஞ்சை பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடந்தது. பூஜிக்கப்பட்ட கும்பநீரால் கோபுர கலசத்திற்கும், விநாயகருக்கும் அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து காளியம்மன் கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கும், மாணவர்களுக்கும் அன்னதானம் நடந்தது. பள்ளி தலைவர் மேகநாதன், உறவின்முறை செயலாளர் செல்வராஜ், பள்ளி செயலாளர் சங்கரலிங்கம், தலைமையாசிரியர் அய்யாத்துரை நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.