பதிவு செய்த நாள்
31
டிச
2016
02:12
மஞ்சூர்: மஞ்சூர் மாரியம்மன் கோவில், கரிமயமலை சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஐயப்பன் விளக்கு பூஜை, விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, 53வது ஐயப்பன் விளக்கு பூஜையை யொட்டி, இன்று, காலை,10:00 மணிக்கு கணபதி
பூஜையுடன், பக்தர்களின் சிறப்பு பூஜை நடக்கிறது. பகல்,3:00 மணிக்கு குந்தா சிவன் கோவிலிலிருந்து அலங்கரித்த புலி வாகனத்தில் பாலகொம்பு, விளக்கு ஊர்வலம் நடக்கிறது. இரவு,7:00 மணி முதல், 9:00 மணி வரை பக்தர்களின் சிறப்பு பூஜையை தொடர்ந்து, பாலக்காடு தேங்குருசி அரிதாஸ் சுவாமிகள் தலைமையில் உடுக்கையடி பாடல் ஐயப்பன் வரலாறு நடக்கிறது.ஜனவரி,1ம் தேதி அதிகாலை, 4:00 மணி முதல்,6:00 மணி வரை குண்டம் இறங்குதல், பால் கிண்டி நிகழ்ச்சி நடக்கிறது.