நெல்லையப்பர் கோயில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2017 10:01
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா நடராஜர் தாண்டவமாடிய ஐந்து சபைகளில் நடக்கிறது. அதில் திருவாலங்காடு ரத்னசபை, சிதம்பரம் பொற்சபை, மதுரை வெள்ளியம்பலம் ஆகியவற்றோடு தாமிரசபை நெல்லையிலும், சித்திரசபை குற்றாலத்திலும் அமைந்துள்ளன.
நெல்லையப்பர் கோயிலில் இன்று காலை 6.50 மணிமுதல் 7.20 வரையிலும் கொடியேற்றம் நடந்தது. சுவாமி சன்னதி முன்புறம் உள்ள கொடிமரத்தில் மூர்த்தி பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் கொடியேற்றம், தீபாராதனை நடத்தினர். வரும் 5ம் தேதி 4ம் நான்காம் திருவிழாவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி<உலா வருகின்றனர். நாளை 3ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலும் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய சபாபதி முன்பாக தினமும் காலை 5 மணி முதல் 6 மணிவரையிலும் திருவெம்பாவை வழிபாடு நடக்கிறது. வரும் 10ம் தேதி இரவில் நடராஜருக்கு திருநீராட்டு நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனையும், தொடர்ந்து தாமிரசபையில் அதிகாலை 4.15 மணி முதல் 4.45 வரையிலும் நடராஜரின் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இன்றைய கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.