ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2017 10:01
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பகல்பத்து உற்சவத்தின் ஐந்தாம் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பாண்டியன் கொண்டை, விமான பதக்கம், முத்துச்சரம், அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட அலங்காரத்தில் அர்ச்சனா மண்டபத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.