பதிவு செய்த நாள்
02
ஜன
2017
12:01
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனைவருக்கும் அனைத்து செல்வங்களும் கிடைப்பதற்காக குபேர மகாலட்சுமி பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள், குபேர மகாலட்சுமியுடன் மூலவர் முன்பு எழுந்தருளினர். யாகசாலை பூஜையில், அனுக்ஞை பூஜை, ஹோமம், குபேர மகாலட்சுமி பூஜைகள் நடந்தது. மூலவர் விநாயகர் பஞ்சமுக அலங்காரத்திலும் மற்ற மூலவர்கள் தட்சிணாமூர்த்தி, மீனாட்சி அம்மன், குருவாயூரப்பன், வள்ளி, தெய்வானை ச-மேத கல்யாண முருகன், ஆஞ்சநேயர், மகாலட்சுமிக்கு வெள்ளிக் கவசம் சாற்றுப்படியானது.
வெள்ளிக்கசவம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தனர். ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு வெள்ளிக் கவசம் சாற்றுப் படியானது. கல்கத்தா காளி அம்மன் கோயிலில் மூலவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருநகர் மருதுபாண்டியர் தெரு ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்நடந்தது.