கோவிலில் சிவதரிசனத்திற்கு அனுமதி அளிப்பவர் நந்தீஸ்வரர். சிவரகசியம் என்னும் ஆகமத்தில் இவரது பெருமை கூறப்பட்டுள்ளது. சிவகணங்களின் தலைவரான இவர் ஈஸ்வர பட்டத்துடன் நந்திகேஸ்வரர் எனப்படுகிறார். சிவனைப் போலவே கையில் மான், மழு ஏந்திய நிலையில் இவர் காட்சியளிப்பார். சைவ ஆகமங்கள் அனைத்தும் நந்தி மூலமாகவே வெளிப்பட்டன. நாயன்மார்கள் உள்ளிட்ட அடியார்களுக்கு அருள்புரியும் போது சிவனும், பார்வதியும் நந்தி மீது காட்சியளிப்பது வழக்கம். எப்போதும் சிவ தியானத்தில் இருக்கும் இவர், தர்மத்தின் வடிவமாக கருதப்படுகிறார். அதாவது தர்மமே கடவுளைத் தாங்கி நிற்பதாக ஐதீகம். ஆற்றலில் சிறந்த நந்தீஸ்வரருக்கு பிரதோஷத்தன்று அருகம்புல், வில்வ மாலை சாத்தி வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.