தென்காசியில் 15ம் தேதி ஷீரடி சாய்பாபா மகோற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2011 11:10
தென்காசி:தென்காசியில் வரும் 15ம் தேதி ஷீரடி சாய்பாபா ஜீவ முக்தி மகோற்சவ விழா நடக்கிறது.தென்காசி ஆய்க்குடி ரோட்டில் ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இக்கோயிலில் வரும் 15ம் தேதி ஷீரடி சாய்பாபாவின் 94வது ஜீவ முக்தி மகோற்சவ திருவிழா நடக்கிறது. காலை 6 மணிக்கு உலக நன்மைக்கான சிறப்பு யாகத்துடன் நிகழ்ச்சிகள் துவங்குகிறது.காலை 8 மணிக்கு அபிஷேகம், காலை ஆரத்தி, மதிய ஆரத்தி நடக்கிறது. இதன் பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் மாலை ஆரத்தி, இரவில் இரவு ஆரத்தி நடக்கிறது. அன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.ஏற்பாடுகளை ஷீரடி சாய் பக்த சபையினர் செய்து வருகின்றனர்.