Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் 1 ரூபாய் நாணயம் ... ஆஸ்தீக சமாஜம் சார்பில் ராதா கல்யாண மகோத்ஸவம் ஆஸ்தீக சமாஜம் சார்பில் ராதா கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கலுக்கு தயாராகும் மக்கள்: கிராமங்களில் சலகெருது ஆட்டம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பொங்கலுக்கு தயாராகும் மக்கள்: கிராமங்களில் சலகெருது ஆட்டம் துவக்கம்!

பதிவு செய்த நாள்

05 ஜன
2017
12:01

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், மார்கழி மாதம் துவக்கத்தையொட்டி சலகெருது ஆட்டம் துவங்கியுள்ளன. அவ்வாறு, குறிச்சிக்÷ காட்டையில் நடந்த சலகெருது ஆட்டம், மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. ஒரு கிராமத்தின் வளம், அங்குள்ள கால்நடை வளத்தை பொறுத்து  நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன், கால்நடை உருவில் வரம் அளிப்பதாக கருதும் கிராம மக்கள், பாரம்பரிய கலையையும் போற்றி  பாதுகாக்கின்றனர். அவ்வாறு பொங்கல் தினத்தன்று, மாடுகள் ஈன்றெடுக்கும் காளைக் கன்றுகள், இறைவனுக்கு சொந்தமானது என கருதப்படுகிறது.  ஆகையால், இந்த கன்றுகள் கோவில்களுக்கு தானமாக அளிக்கப்படுகிறது. அதனை தத்தெடுக்கும் கிராம மக்கள், அவற்றை சலங்கை மாடுகளாக  மாற்றுகின்றனர். ஒவ்வொரு கிராமத்தினரும், தங்கள் பகுதிக்கு ஒரு சலங்கை மாட்டை தேர்ந்தெடுத்து, அவற்றை பாதுகாத்து வளர்த்தும் வரு கின்றனர்.

அந்த மாடுகளுக்கு ‘சலகெருது’ என பெயரிட்டு, ஆல்கொண்டமாலனுக்கு உரியதாக போற்றப்படுவதால், இந்த எருதுகளுக்கு மூக்கணாங்கயிறு கூட  அணிவிக்கப்படுவது கிடையாது. இந்த கன்றுகள், கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரியும். எருதுகளின் பராமரிப்பை மக்களே ஏற்பர். மார்கழி மாத  இரவுகளில், ஊர் பொது இடத்தில், இசைக்கு தகுந்தாற்போல் ஆடி செல்ல, உறுமி இசை கலைஞர் தலைமையில், தேவராட்ட குழுவினரால் இந்த  கன்றுகள் தயார்படுத்தப்பட்டும் வருகிறது. ஆட்டக்காரர் தனது கைகளில் இரண்டு நீளமான குச்சிகளை கையில் ஏந்தி, உறுமி இசைக்கேற்ப காளையின் முன்பு ஆடிச் செல்வர். ஆட்டக்காரரின் ஆட்டத்துக்கு ஏற்றவாறு, தனது தலையை அசைத்தவாறு காளைகள் அவர்களை பின்தொடரும். அவ்வாறு, ஆட்டக்காரரின் அசைவுகளுக்கு பின் தொடரும் சலகெருது, ஆட்டத்தில், சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், ஆட்டக்காரரை முட்டுவது ÷ பால, ஆவேசமாக பாயும்.  அப்போது, குச்சிகளை தரையில் ஊன்றி, தடுப்பு போல ஏற்படுத்தி, ஆட்டக்காரர் எருதின் தாக்குதலில் இருந்து தப்பிப் பார். இவ்வாறு, மார்கழி மாதம் முழுவதும், தங்கள் கிராமங்களில் சலகெருது ஆட்டத்தை ஆடும் மக்கள், தை பிறந்ததும், சிறப்பு பொங்கலை எரு துக்காக வைத்து வழிபடுவர்.  

பின்னர், கால்நடைகளின் தெய்வமாக கருதப்படும் ஆல்கொண்டமால் கோவிலுக்கு, அவை அழைத்து செல்லப்படுகின்றன.  அங்கு, உடுமலை  சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து, அனைத்து சலகெருதுகளும் வரவழைக்கப்பட்டு, திருவிழா நடக்கும். பொங்கல் திருவிழா முடிந்ததும், நாட்டுப்புற  பாடல்கள் பாடப்பட்டு, சலகெருது பால் எடுக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படும். கிராம வள மேம்பாட்டுக்கு காரணமாக திகழும் சலகெருதை உடுமலை  பகுதி கிராம மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.  தற்போது, குறிச்சிக்கோட்டை, கொளத்துப்புதுார், வாளவாடி, குறிஞ்சேரி, கொங்கல்நகரம், லி ங்கம்மாவூர், அம்மாபட்டி, பெரியகோட்டை, வெனசப்பட்டி என பல்வேறு கிராமங்களில், இந்த பாரம்பரியம் தொடர்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.  இந்நிலையில், குறிச்சிக்கோட்டையில் நடந்த சலகெருது ஆட்டம் கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியது. காணும் பொங்கலையொட்டி, கொ ங்கலக்குறிச்சி செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சலகெருது அழைத்துச் செல்லப்பட இருப்பதால், அதற்கான ஆயத்தப்பணிகளும் துவங்கியுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar