பதிவு செய்த நாள்
05
ஜன
2017
12:01
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், வரும் 11ம் தேதி, ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. இதற்காக, கோவில் ராஜகோபுர முன், தகர ஷெட் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, அவ்வழியே வந்த லாரி, பந்தல் மீது மோதியது. இதில், 30 அடி நீளத்தில் அமைக்கப்பட்டி ருந்த, பந்தல் லாரி மீது அப்படியே சரிந்தது. பந்தல் சரிந்த நேரத்தில், அவ்வழியே யாரும் செல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கோவி லின் முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசனத்தில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், விழாவுக்காக, அமைக்கப்பட்ட பந்தல், அடியோடு சரிந்தது விஷயம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கோவில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், தற்போது விழா பந்தல் சரிந்துள்ளது, அபசகுனமாகவே பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கு உரிய பரிகார பூஜை செய்து, மீண்டும் பந்தல் அமைக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.