ராமேஸ்வரம் கோயில் தங்கும் விடுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி உள்ளது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2017 12:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் இயங்கிவரும் இலவச தங்கும் விடுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி உள்ளது. ரா÷ மஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு கோடி ரூபாய் செலவில் கழிப்பறை, குளியலறை வசதிகளுடன் இலவச தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 500 பக்தர்கள் வரை தங்கி செல்லும் வசதி உள்ளது. பக்தர்களின் பயன்பாட்டுக்காக இந்த விடுதி கடந்த ஜன.,ல் முதல்வர் ஜெ., காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அன்று முதல் இன்று வரை விடுதியில் தங்க எதிர்பார்த்த பக்தர்கள் வரவில்லை. கோயிலில் இருந்து 700 மீட்டர் துாரத்தில் அமைந்துள்ளதால் இலவச தங்கும் விடுதி குறித்து பக்தர்களுக்கு தெரியவில்லை. இதனால் தான் விடுதி வெறிச்சோடி உள்ளது. இதை தவிர்க்கும் விதமாக ரயில்வே ஸ் டேஷன், கோயில் ரத வீதிகள், பஸ் ஸ்டாண்ட், கார் பார்க்கிங் பகுதி, போலீஸ் ஸ்டேஷன், பாம்பன் சாலை பாலம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் விளம்பர போர்டுகள் வைக்கவேண்டும். இதற்கு கோயில் இணை ஆணையர் செல்வராஜ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.