பதிவு செய்த நாள்
07
ஜன
2017
02:01
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள லட்சுமி தீர்த்த குளத்தை சீரமைத்து, ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற வேண்டும் என, பக்தர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலை சார்ந்த, லட்சுமி தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தில், செடிகள் முளைத்து புதர்மண்டி, பாசிகள் நிறைந்து கிடக்கிறது. மேலும் இக்குளத்தின் கரைப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், குளத்தில் கலந்து, அசுத்தமாக காட்சியளிக்கின்றன. சிறப்பு வாய்ந்த இக்குளம், தற்போது சீரழிந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் இக்குளத்தை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என, பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.