பதிவு செய்த நாள்
07
ஜன
2017
02:01
தர்மபுரி: தர்மபுரி, கோட்டை பரவாசுதேவர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஜன.8 சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. இதில், தர்மபுரி கோட்டை பகுதியில் உள்ள, பிரசித்தி பெற்ற பரவாசுதேவர் கோவில் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஏகாதசியில் கலந்து கொள்வர். இந்தாண்டு, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வருவதால், கூட்டம் சற்று அதிகமாக காணப்படும். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட் சார்பாக, பக்தர்களுக்கு வழங்க, 5,000 லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. நாளை காலை, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கவுள்ளது. இத்தகவலை, கோவில் செயல் அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.