Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பொருளாதார வளம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) செல்வாக்கு உயரும்
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) செல்வாக்கு உயரும்

பதிவு செய்த நாள்

11 ஜன
2017
02:01

நல்ல எண்ணம் படைத்த மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்து சாதகமான பலனை தர உள்ளார். கேது மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். செவ்வாய் ஜன.16 வரை நன்மை தருவார். சுக்கிரன் ஜன.27ல், 12ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பானது அல்ல. அதேநேரம் புதன் ஜன.30ல் சாதகமான நிலைக்கு வந்து நற்பலனைக் கொடுப்பார். குரு பகவான் ஜன.16ல் 7ம் இடத்திற்கு செல்வது மிகவும் உயர்வான நிலை. குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும்.

இப்போது புதன் 9ம் இடத்தில் இருப்பதால் மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பைச் சந்திக்கலாம். பொறுமையுடன், விட்டுக் கொடுத்து போகவும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். ஆனால் ஜன.30ல், 10ம் இடத்திற்கு செல்வதால் பிரச்னைகள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். பெண்களால் பெரிதும் முன்னேற்றம் காண்பீர்கள். செவ்வாய், சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீட்டில் மகிழ்ச்சியும் குதுாகலமும் குடிகொண்டிருக்கும்.  பணவரவு நன்றாக இருக்கும். சொந்தபந்தங்களால் ஜன.30,31ல் நன்மை கிடைக்கும் ஆனால் பிப்.9,10ல் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பிப்.7,8ல்  ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஜன.26 வரை போட்டியாளர்களின் சதி எடுபடாது. அதன் பிறகு அவர்கள் வகையில் கவனம் தேவை. யாரையும் எளிதில் நம்பி விட வேண்டாம். ஜன.30க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும்.  பிப்.1,2,5,6ல் பணிகளில் சிறு தடைகள் வரலாம்.

பணியாளர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.  ஜன.16ந் தேதிக்குள் அவர்கள் தங்கள் கோரிக்கைகளை  கேட்டு பெற்று கொள்ளவும்.  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சக பணியாளர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். ஜன.27,28,29ல் எதிர்பாராத நற்பலன் கிட்டும்.

கலைஞர்கள் ஜன.26 வரை புதிய ஒப்பந்தங்கள் பெற்று நல்ல பொருளாதார வளத்தை காண்பர். அதன் பிறகு தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். எதிரிகளால் தொல்லைகள்,போட்டிகள் அதிகம் இருக்கும்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காணலாம். ஜன. 15,16 பிப்.11,12ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிறப்பான பலன் காண்பர். கெட்டவர்களோடு சேர்ந்து படிப்பை பாழாக்கியவர்கள் ஜன.30க்கு பிறகு அதில் இருந்து விடுபடுவர். புதன் அருளால் நல்ல மதிப்பெண்களும், பாராட்டும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் சீரான மகசூலைப் பெறுவர். மாதத் தொடக்கத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும். காய்கறிகள், பழ வகைகள் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் ஜன.16க்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். வேலை செய்யும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். வேலை பார்க்கும் பெண்கள் ஜன.27 வரை அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். அதன்பின் பதவி உயர்வு கிடைக்கும். ஜன.15,27,28, பிப்.3,4ல் குதுாகலமான பலனைக் காணலாம்.

நல்ல நாள்: ஜன.17,18,19,20,21,27,28,29, 30,31, பிப்.3,4,7,8,

கவன நாள்:  ஜன.22,23,24 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட எண்: 1,9  நிறம்:  மஞ்சள், சிவப்பு

பரிகாரம்: ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar