சபரிமலை ஐயப்பனுக்கு நேர்த்திக்கடன் பரமக்குடியில் மணி விற்பனை ஜோர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2017 12:01
பரமக்குடி: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துவதற்காக பரமக்குடியில் விதவிதமான மணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக மணியை கழுத்தில் அணிந்துசென்று காணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பரமக்குடி பாத்திர கடைகளில் விதவிதமான மணிகள் விற்பனை செய்யப்படுகிறது. எடையை பொறுத்து 20 முதல் 100 ரூபாய் வரையிலான மணிகளை ஐயப்ப பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் மணி விற்பனை களைகட்டி வருகிறது. இதற்காக பரமக்குடி பாத்திரக்கடைகளில் பல வண்ண டிசைன்களுடன் மணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 20 ரூபாய் இருந்து 100 ரூபாய் வரை எடைக்கேற்ப விலை உள்ளது.
இதுகுறித்து பாத்திரக்கடை வியாபாரிகள் கூறுகையில்: “மகர ஜோதியை கண்டு தரிசிப்பதற்காக பரமக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்ல உள்ளனர். இவர்கள் நேர்த்திக்கடனாக மணியினை கழுத்தில் அணிந்துசென்று காணிக்கை செலுத்துவது வழக்கம். இதனால் பாத்திரக்கடைகளில் மணி விற்பனை அதிகரித்துள்ளது,” என்றனர்.