பதிவு செய்த நாள்
16
ஜன
2017
11:01
மூணாறு,: சபரிமலையில் மகர விளக்கு தோன்றும் போது, மூணாறில் உள்ள காளியம்மன்,நவ கிரக,கிருஷ்ணர் கோயில் சார்பில் அருகில் உள்ள ஹனுமான் மலையில் 25 ஆயிரம் தீபங்கள் ஏற்பட்டன. சபரிமலையில் நேற்று மகர விளக்கு தோன்றிய போது, மூணாறில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும் நடந்தன.தேவிகுளத்தில் தர்மசாஸ்தா கோயிலில் நேற்று காலை முதல் ஐயப்பனுக்கு தீபாராதனையும்,பூஜைகளும் நடந்தது.மாலையில் இரச்சல்பாறை ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் இருமுடி சுமந்து,செண்டை மேளம்,சப்பர ஊர்வலத்துடன் தர்மசாஸ்தா கோயிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடந்தன. இதே போல் மூணாறில் உள்ள காளியம்மன்,நவகிரக,கிருஷ்ணர் கோயில் சார்பில் அருகில் உள்ள ஹனுமான் மலையில் ஆண்டுதோறும் மகரவிளக்கின்போது,தீபங்கள் ஏற்றபட்டு வருகிறது. அதன்படி நேற்று 25 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டன.இதனையொட்டி வாண வேடிக்கையும், அன்னதானமும் நடந்தது.