திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த வாதானுார் கிராமத்தில், பாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிறைவு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதனையொட்டி, நாளை (19ம் தேதி) காலை 7:30 மணிக்கு மேல் மகா சங்கல்பம், புண்யாகம், அக்னி பிரதிஷ்டை, கலச ஆராதனம், ஹோமம், வேத பிரபந்த சாற்று முறை நடக்கிறது. தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு மேல் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.