விருதுநகர் : திருத்தங்கல் ஸ்ரீகணேஷ் வித்யாலயாஸ் பள்ளியில் பி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஐயர் அறக்கட்டளை சார்பில் பாவை விழா நடந்தது. மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை, திருபள்ளி எழுச்சிப் பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டி நடத்தப்பட்டது. எல்.வி.ஆர். மெட்ரிக்., பள்ளி, டைம் கிட்ஸ் மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கணேஷ் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் சந்திரா வரவேற்றார். பள்ளி தாளாளர் மைதீலி பரிசு, சான்றிதழ் வழங்கினார்.