ஊட்டி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், காந்தல் கிளை சார்பில், மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில், நாட்டில் நிலவும் வறட்சி நீங்க வேண்டும்; போதியளவு மழை பெய்ய வேண்டும்; விவசாயம் செழிக்க வேண்டும்; குடிநீர் பிரச்னை தீர வேண்டும் என, பிரார்த்தனை செய்யப்பட்டது; ஏராளமானோர் பங்கேற்றனர்.