Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் ... கடலுார், பண்ருட்டியில் ஆற்றுத் திருவிழா கோலாகலம் கடலுார், பண்ருட்டியில் ஆற்றுத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமானுஜரின் ஸஹஸ்ராப்தி விழா துவங்கியது ரத யாத்திரை
எழுத்தின் அளவு:
ராமானுஜரின் ஸஹஸ்ராப்தி விழா துவங்கியது ரத யாத்திரை

பதிவு செய்த நாள்

19 ஜன
2017
11:01

சென்னை: வைணவத்தை மக்களுக்கு போதித்த, ராமானுஜரின், 1,000வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், தொடர் விழாக்களுக்கு ஏற்பாடு செய்திருக்கும் லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்ட், ராமானுஜ தரிசனம் எனும் பெயரில், மாபெரும் ரத யாத்திரையை, நேற்று சென்னையில் துவக்கியது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் இருந்து, நேற்று மாலை, 7:30 மணிக்கு துவங்கிய ரத யாத்திரையை, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னரான, இ.எஸ்.எல்.நரசிம்மன் துவக்கி வைத்தார். பா.ஜ., - எம்.பி., இல.கணேசன், ஸ்ரீபெரும்புதுார் எம்பார் ஜீயர் மற்றும் பல ஜீயர்கள் கலந்து கொண்டனர். விழாவில், ராமானுஜர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் உறையை, சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர், ராதிகா சக்கரவர்த்தி வெளியிட்டார். லிப்கோ சாரிட்டீஸ் டிரஸ்டின் துணைத் தலைவர் ராதா விஜயசாரதி பேசியதாவது: இந்த ரதம், இன்னும் நான்கு நாட்களுக்கு சென்னையில் இருக்கும்; பின், தென் மாவட்டங்களுக்குச் செல்லும். பின், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பயணித்து, ஏப்ரல் 22ல் சென்னை திரும்பும்.

ஏப்ரல் 26 முதல், மே 5 வரை, சென்னை தீவுத் திடலில், அற்புத ராமானுஜர் என்னும் தலைப்பில் ராமானுஜர் வாழ்வில் நடந்த முக்கியமான, 50 நிகழ்வுகளைச் சொல்லும் ஆன்மிக கண்காட்சி நடக்கிறது. பிப்., 4, 5ம் தேதிகளில், பஜ ராமானுஜம் எனும் தலைப்பில் குழந்தைகளுக்கான, ராமானுஜர் ஸ்லோகம் ஒப்புவித்தல் போட்டியும் நடைபெறுகிறது. இவை தவிர, மே 7ம் தேதி, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா மண்டபத்தில், ஜகதாச்சாரியன் பகவத் ராமானுஜர் எனும் தலைப்பிலான கருத்தரங்கிற்கும், பெரியவர்களுக்கான கட்டுரைப் போட்டிக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். விழா தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, 95668 74070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar