Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமானுஜரின் ஸஹஸ்ராப்தி விழா ... கொள்ளு மோட்டம்மன் திருவிழா கொள்ளு மோட்டம்மன் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார், பண்ருட்டியில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
கடலுார், பண்ருட்டியில் ஆற்றுத் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

19 ஜன
2017
12:01

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்த சுவாமிகளுக்கு நடைபெற்ற தீர்த்தவாரியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். பொங்கல் பண்டிகையின் 6ம் நாளான நேற்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்பட்டது. கடலுாரில், பெண்ணையாற்றில் நடைபெற்ற விழாவிற்கு, கடலுார் பாடலீஸ்வரர் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் புதுச்சேரி மாநில எல்லை கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்தும் சுவாமி அலங்கரித்து ஊர்வலமாக பெண்ணையாற்றுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு தீர்த்தவாரி மற்றும் தீபாராதனை நடந்தது.  இந்த தீர்த்தவாரி உற்சவத்தை கடலுார் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பெண்ணை ஆற்றங்கரை ஓர கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து கண்டுகளித்தனர். ஆற்றுத் திருவிழாவையொட்டி பெண்ணையாற்றில் ஏராளமான கடைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திட ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றிருந்தது.  மேலும் ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே விற்பனை செய்யப்படும் சிறுவள்ளிக் கிழங்கு அதிகளவு விற்பனையானது.

பண்ருட்டி: கெடிலம் ஆற்று திருவிழா, கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்று தீர்த்தவாரி திருவிழா நடந்தது. விழாவில் 100க்கும் மேற்பட்ட  கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் வீதியுலா வந்து ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விழாவை கொண்டாடினர்.  சிறுவர்கள்  விளையாடுவதற்கு புதிய ரக ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar