போடி, தை உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு போடி ஐயப்பன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாராதனை நடந்தது. ஐயப்ப பக்தசபை தலைவர் முனியாண்டி தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் ஆறுமுகம், அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொருளாளர் முருகன், துணை செயலாளர் மாரிமுத்து, இணை செயலாளர் முருகேசன் பங்கேற்றனர். மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்காரத்தினை பட்டாச்சாரியார் கமலகண்ணன் செய்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.