குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் மிட்டாய் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2017 12:01
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மிட்டாய் வைத்து வழிபாடு நடத்தினர். தைப்பூசத்தை முன்னிட்டு வருடந்தோறும் காரைக்குடி, திருச்சி, புதுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு செல்கின்றனர். இந்தாண்டு தைப்பூசம் நெருங்கும் நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. பழநிமலை முருகன், ஒட்டன் சத்திரம் அருகிலுள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் குழந்தை வடிவமாக காட்சி அளிக்கிறார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், தவறாமல் இங்குள்ள குழந்தை வேலப்பரை வழிபடுவர். மனம் உருக முறையிடும் குறைகள் நிவர்த்தி ஆகின்றன. இதனால் அடுத்த முறை இங்கு வரும்போது குழந்தைகளுக்கு பிடித்த மிட்டாய் வகைகளை இங்குள்ள மரங்களில் ஒட்ட வைத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இவ்வாறு நுாதன காணிக்கை செலுத்தி வழிபாடு செய்வது இங்கு வழக்கமாக உள்ளது.