பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
கோபி: கோபி அருகே கெட்டிசெவியூர், தான்தோன்றியம்மன், ஸ்ரீதேவி பூமிதேவி சமேத, கல்யாண வெங்கடரமண பெருமாள், மாரியம்மன், ஞானாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் கும்பாபி?ஷகம் பிப்., 6ல் நடக்கிறது. பிப்., 2ல் பவானி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்படும். பிப்.,3ல் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, சைவ புண்யாஹம் நடக்கிறது. பிப்.,4ல் கணபதி வழிபாடு, கோபூஜை, முதல்காலயாக பூஜை நடக்கிறது. பிப்.,5ல் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, பிப்.,6ல் காலை 7:00 மணிக்கு மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம், தான்தோன்றியம்மன் கோயில் கும்பாபி?ஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கெட்டிசெவியூர் மக்கள் செய்து வருகின்றனர்.