காரைக்காலில் திருப்பதி வெங்கடேச பெருமாள்: பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2017 05:01
காரைக்கால்: காரைக்காலுக்கு வருகைப்புரிந்த திருப்பதி வெங்கடேச பெருமாளை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினத்தில் திருப்பதி வெங்கடேச பெருமாளின் திருக்கல்யாண உற்சவம் (29ம் தேதி) நடக்கிறது.
திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வதிற்காக காரைக்கால் வழியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வந்த திருப்பதி வெங்கடேச பெருமாளை காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவில் சார்பில், வெங்கடேச பெருமாளுக்கு வரவேற்று அளிக்கப்பட்டது.பின் கோவில் வாயில் முன் திருப்பதி பெருமாளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. மதியம் 2மணிக்கு வந்த திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலில் முன் திரண்டனர். பின் அலங்கரிக்கப்பட்ட ரதத்தின் பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். காரைக்காலிருந்து திருப்பதி வெங்கடேச பெருமாள் ரதம் நாகப்பட்டினம் சென்றது. பெருமாளை சாலையில் சென்ற பொதுமக்கள் கோவிந்த முழங்க தரிசனம் செய்தனர்.