கோயில்கள் அனைவருக்கும் பொதுவானது ஆர்.பி.வி.எஸ். மணியன் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2017 12:01
மதுரை: மதுரையில் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். டாக்டர் உதிரன் ராஜேந்திரன் வரவேற்றார். விஸ்வ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசியதாவது: ஜாதி பாகுபாடின்றி அனைவரும் கோயிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என ராமானுஜர் விரும்பினார். குறிப்பிட்ட ஜாதியினர் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட பல்வேறு செய்திகளை நாளிதழ்களில் படிக்கிறோம். இந்த நிலைதான் பலர் இந்து மதத்தை விட்டு நீங்க காரணமாக அமைந்தது. இந்நிலை மாறி, கோயில்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும். ராமானுஜர், ராமர் போன்றோர் மக்களோடு மக்களாக வாழ்ந்தனர். ஆனால், சாதாரண மனிதர்களை காட்டிலும் உயர்ந்து நின்றனர். அவர்கள் வழியை நாம் பின்பற்ற வேண்டும். நாயன்மார்களை சைவர்களாகவும், ஆழ்வார்களை வைணவர்களாகவும் கூறுவதை ஏற்க முடியாது. அக்காலத்தில் அது போன்ற பிரிவுகள் தோன்றவில்லை. சமணம், பவுத்தத்தின் தாக்கத்திலிருந்து மக்களை காக்க அவர்கள் வெவ்வேறு கடவுளை மக்களிடம் பரப்பினர். ஆங்கிலேயர்கள்தான் இந்தியாவில் ஜாதி பாகுபாட்டினை முதலில் புகுத்தியவர்கள், என்றார். ஸ்ரீமஹாஸ்வாமி நீ பீட நிறுவனர் பாண்டியராஜன், சின்மியா மிஷன் பொது செயலாளர் திலகர், சமூக சேவகர் ரவிசங்கர், வழக்கறிஞர் கனகராஜ், விழா கமிட்டி நிர்வாகி சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.