பதிவு செய்த நாள்
30
ஜன
2017
01:01
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் திருமுருகன் கோவிலில், வரும் 3ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பேரம்பாக்கம் அடுத்த, நரசிங்கபுரத்தில் உள்ளது திருமுருகன் கோவில். இந்த கோவிலில், 16 ஆண்டுகளுக்கு பின், கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் புதிய வர்ணம் பூசப்பட்டு, வரும் 3ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக, நாளை காலை, 8:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாட்டுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. அன்று மாலை, 6:00 மணிக்கு, அனைத்து கோவில் வழிபாடும் நடைபெறும். வரும் 3ம் தேதி காலை, 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் வள்ளி, தெய்வானை சமேத திருமுருகனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அதன்பின், மாலை, 6:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத திருமுருகனுக்கு திருமண வைபவமும் நடைபெறும். பின், உற்சவர் மயில் வாகனத்திலும், தர்மசாஸ்தா புலி வாகனத்திலும் வீதிஉலா நடைபெறும்.