பதிவு செய்த நாள்
30
ஜன
2017
01:01
சின்னசேலம்: கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில், அக்னிபிரவேசம்,102 கோத்திர பூஜை நடந்தது. சின்னசேலம் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று காலை 8.00 மணிமுதல் சுவாமிக்கு 17 வகையான அபிஷேகம் செய்து 2கிலோ மஞ்சலை கொண்டு, அம்மனை ஆவனாகம் செய்தும்,102 கொப்பரை தேங்காயும்,கலசம் வைத்து வேள்வி, ேஹாம பூஜையும் நிறைவு செய்து,அதில் ஆவனம் செய்த அம்மனை வேள்வியில் ஏற்றி, உற்சவ அம்மனை பூக்குழியில் இறக்கி,தீபாராதனை செய்து மீண்டும் 102 ரீஷி மற்றும் அந்தந்த கோத்திர தம்பதிகளாக பூஜை செய்தனர். அம்மனுக்கு அபிஷோகம்,தங்க கவசங்கள் அணிவித்து தீபாராதனையை கணேஷ்சர்மா செய்தார். நிகழ்ச்சியில், ஆர்ய வைசிய சமூகத்தினர்,சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னதாக மகிளாவிபாக், வாசவிவனிதா கிளப்பின் புதிய நிர்வாகிகள் பெறுப்பேற்றனர்.