பதிவு செய்த நாள்
30
ஜன
2017
02:01
ஆர்.கே.பேட்டை: தைப்பூசத்தை ஒட்டி, வரும் 9ம் தேதி, ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பத்மாபுரம் அருகே உள்ள வள்ளலார் கோவில், பொதட்டூர் பேட்டை வள்ளலார் கோவில்களில், சிறப்பு ஜோதி தரிசனம் நடக்கிறது. பொதட்டூர்பேட்டை சிலம்பு பாளையம் தெருவில், மதியம் 12::00 மணிக்கு அன்னதானம், அதை தொடர்ந்து ஜோதி தரிசனம் நடைபெறும். இதே போல், நகரி அடுத்த, நாராயணவனம், அகத்தீஸ்வரர் கோவிலில், 108 இளநீர் அபிஷேகம் ஆராதனை நடைபெறும். அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாணசுந்தரேசனார் கோவில் வளாகத்தில் உள்ள, வள்ளலார் கோவிலிலும், சிறப்பு தரிசனம் நடைபெறும்.