பதிவு செய்த நாள்
31
ஜன
2017
10:01
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்யதேசங்கள் ஸ்ரீ நாராயண பெருமாள், குடமாட கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளி கொண்டபெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், ஸ்ரீ மாதவப் பெருமாள், பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோ பாலன் ஆகிய 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன.
இங்கு ஆண்டு தோறும் தை அம்மாவாசைக்கு மறுநாள் பிரசித்தி பெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவம் நடைபெருவது வ ழக்கம். இவ்வாண்டு 123ம் ஆண்டு கருடசேவை உத்ஸவம் நேற்று நடைபெற்றது. கருடசேவையை முன்னிட்டு திருமங்கை ஆழ்வாரின் அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும் தங்கள து கோயில்களில் இருந்து புறப்பட்டு மணிமாடக் கோயிலுக்கு வந்தனர். அவர்களை திருமங்கை ஆழ்வார் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும் கோயில் ம ண்டபத்தில் எழுந்தருள சிறப்புத் திருமஞ்சணம் செய்யப்பட்டது. இரவு 12 மணிக்கு மணிமாட கோயில் கோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வார் எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு 11 பெருமாள்களும் ஒருவர்பின் ஒருவராக தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர்.
அவர்களுக்கு திருமங்கை ஆழ் வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று, தீபஆரத்தி எடுக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பா டி பெருமாள்களை சேவித்தனர். தொடர்ந்து இரவு 01 மணிக்கு, 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலா காட்சி நடைபெற்றது. தங்க கருட சேவை உத்ஸவத்தில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மயிலாடுதுறை இங்து சமய அறநிலையத்துறை இணை ஆனையர் கஜேந்திரன் உள்பட தமிழகம் மட்டுமன்றி பலமாநிலங்களில் இருந்து வந்திருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு 11 பெருமாள்களையும் ஒரே இடத்தில் கண்டு சேவித்தனர். தொடர்ந்து 11 பெருமாள்களும் 4 வீதிகளையும் வலம் வந்து அதிகா லை மீண்டும் மணிமாட கோயிலில் எழுந்தருளினர். கருடசேவை உத்ஸவத்தை முன்னிட்டு போலீசார் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யாததால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். விழா ஏற்பாடுகளை திருநாங்கூர் 11 கருடசேவை உத்ஸவ கமிட்டியினர் செய்திருந்தனர். நாகை எஸ்.பி., துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாகை, மயிலாடுதுறை, சீர்காழியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.