திண்டுக்கல்: தைப்பூசத்தை யொட்டி, பழநிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்காக, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் சந்நிதி அருகே அன்னதான குடில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு, ஏழாம் ஆண்டாக இந்த குடிலை, அமைத்துள்ளது. பிப்., 6 மாலையில் பக்தி இன்னிசை, கூட்டு வழிபாடுடன் அன்னதானம் துவங்குகிறது. பிப்.,7ம் தேதி காலை 9:00 மணிக்கு மஹா சக்தி வேல்பூஜை வேல் மாறல் பாராயணம் நடக்கிறது. பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு 99443 09719.