பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2017 12:02
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலவநத்தம் சிவசந்தநாதசுவாமி பரிபூரணதம்மாள்-இருளப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 3ல் விநாயகர் பூஜையுடன் துவங்கியது. பிப். 4ல் மஹாகணபதி, நவகிரஹ, லட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. பிப். 5ல் மூன்றாம் கால யாக பூஜை நடந்தன. நேற்று காலை 10:24 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கமிட்டி தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். பொருளாளர் சங்கர்ராஜ் வரவேற்றார். பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் முருகானந், பள்ளி கல்வித்துறை பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அன்னதானமும் நடந்தது.