பதிவு செய்த நாள்
08
பிப்
2017
02:02
ஓசூர்: ஓசூர் தேர்ப்பேட்டை திரவுபதி சமேத தர்மராஜா சுவாமி கோவில் கரகம் மற்றும் பல்லக்கு உற்சவம் நேற்று துவங்கியது. ஓசூர் தேர்ப்பேட்டையில் உள்ள திரவுபதி சமேத தர்மராஜா சுவாமி கோவிலில், கரகம் மற்றும் பல்லக்கு உற்சவம், நேற்று மாலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று (பிப். 8) மற்றும் நாளை (பிப். 9) இரவு, 7:00 மணிக்கு, நித்திய பூஜைகள், 10 மாலை, 6:30 மணிக்கு, திரவுபதி சமேத தர்மராஜா சுவாமி திருக்கல்யாண உற்சவம், 11 மற்றும் 12ல், இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தர்மராஜா சுவாமி கோவிலில் இருந்து, 13 இரவு, 8:00 மணிக்கு, கரகம் புறப்பட்டு, ராமநாயக்கன் ஏரியில் பூஜை செய்து, மீண்டும் கோவிலுக்கு புறப்பட்டு வரும் நிகழ்ச்சியும், 14 மாலை, 4:30 மணிக்கு, திகலர்பேட்டை எல்லம்மன் கோவிலில் இருந்து, தர்மராஜா சுவாமி கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலம், 15 நள்ளிரவு, 12:00 மணிக்கு, கரக மஹோத்சவம், அக்னி குண்ட உற்சவம், நகர பிரவேச பூஜைகள், முத்து பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.