பதிவு செய்த நாள்
08
பிப்
2017
02:02
பழைய சூரமங்கலம்: சேலம், பழைய சூரமங்கலம் சித்து மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலத்தில் பக்தர்கள் பங்கேற்றனர். சித்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 7:00 மணிக்கு நடந்த தீர்த்தக் குட ஊர்வலத்தில், 300க்கும் மேற்பட்ட பெண்கள், புனித நீர் நிரம்பிய கலசங்களை தலையில் சுமந்து வந்தனர். மேலும், விழாவையொட்டி, கோபுரத்தில் வைக்கப்படவுள்ள கலசங்களை ஊர்வலத்தில் எடுத்து வந்தனர். மாலை, 5:00 மணிக்கு முதல்கால யாக வேள்வி துவங்கியது. இன்று காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி, இரவு, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் சுவாமி சிலைகளுக்கு, மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு மேல், 10:15 மணிக்குள், கும்பாபி ?ஷகம் நடக்கிறது. விழாவில், கடந்த, 15 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல், நீர் அருந்தாமல் வாழ்ந்து வரும் மகா ஆனந்த சித்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.