பதிவு செய்த நாள்
08
பிப்
2017
02:02
சேலம்: சேலத்தில், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழா, இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அம்மாபேட்டை மெயின் ரோட்டில் உள்ள, அன்பு கரசு மெத்தை அருகே, அலங்கார பந்தல் அமைத்து, அதில் ராமானுஜரை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இன்று காலை, 9:00 மணிக்கு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, ராமானுஜர் புறப்பாடு நடக்கிறது. 10:00 மணிக்கு விழா பந்தலில் ராமானுஜர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம், 12:00 மணிக்கு திருமஞ்சனம், ஆராதனை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு சொற்பொழிவு, 5:30 மணிக்கு ஹரி பஜனை, 7:30 மணிக்கு ராமானுஜர் புறப்பாடு நடக்கிறது.