பதிவு செய்த நாள்
10
பிப்
2017
12:02
பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் ஏழுமணி நேரம் காத்திருந்தனர்.தைப்பூசத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன்கோயில் நான்குரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. இதில், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய், எஸ்.பி.,(பொறுப்பு) தேஷ்முக் சஞ்சய்சேகர், பழநி சப்கலெக்டர் வினீத், டி.எஸ்.பி., வெங்கட்ராமன், தாசில்தார் ராஜேந்திரன், சித்தனாதன் அன் சன்ஸ் தனசேகரன், பழனிவேல், செந்தில்குமார், பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமார், வடக்குகிரிவீதி கந்தவிலாஸ் நவின்விஷ்னு, ஜெகதீசன், நியூ திருப்பூர் லாட்ஜ் ராமநாதன், நடராஜன், மகேஷ்.பழநி ஆதினம் சிவானந்த புலிப்பாணி பாத்திரசுவாமிகள், சுகந்தவிலாஸ் சந்திரா, உமாமகேஸ்வரி, பழநி பாலாஜி கருத்தரித்தல் மைய இயக்குனர் செந்தாமரைசெல்வி, ஐஸ்வர்யா கருத்தரித்தல் மைய இயக்குனர் சந்திரலேகா, அக்குவாகேர் உரிமையாளர்கள் சிவக்குமார், ராகவன், வேலன் யமஹா வினோத்குமார், விவேக்குமார், ஸ்டார் கம்ப்யூட்டர்ஸ் கார்த்திகேயன், விசாகன் ஜூவல்லரி துர்காராம், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரி பாஸ்கரன், குமரன்விலாஸ் ஞான
சேகரன், பழனிகுமார், வழக்கறிஞர்கள் திருமலைசாமி, ஜெயராமன், ஆனந்தவிலாஸ் விபூதி ஸ்டோர் முனியாண்டி, ஜெயலட்சுமி. கவுரிகிருஷ்ணா ஓட்டல் ராதாகிருஷ்ணன், சின்னப்ப கவுண்டர் காபிபார் மணிகண்டன், சுவாமிவிலாஸ் முருகேசன், எஸ்.பி.,காய்கனி திருச்செல்வம், சரவணா ரியல் எஸ்டேட் விஸ்வநாதன், ஜெயம் லாட்ஜிங் சரவணன், மாசிமலை சிற்ப கலைக்கூடம் நாகராஜன், சங்கர் அன் கோ சுந்தர், குமார், அண்ணாமலை உண்ணாமலைநாயகி கோயில் தலைவர் நாகராஜன், ராகவேந்திரா டிரஸ்ட் சீனிவாசன். ஞானதண்டாயுத பாணிசுவாமி நவபாசனசிலை பாதுகாப்பு கமிட்டி விமலபாண்டியன், பழநி மலைக்கோயில் சண்முகவிலாஸ் காபி கிளப் வெங்கடாசலம், ஜெயமுருகன் சேம்பர், சரவணா ஓட்டல் பச்சைமுத்து, குமரவேல் விலாஸ் பாத்திரக்கடை கண்ணன், பழனி முருகன் பர்னிச்சர் மார்ட் வெங்கடசுப்ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பழநி தைப்பூச விழாத்துளிகள்:
* வடக்குகிரிவீதி, குறும்பபட்டி ரோடு, தேவர்சிலைரோடு உள்ளிட்ட குறுக்குரோடுகள் அடைக்கப் பட்டதால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல்
நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.
* மதுரை சிறப்பு ரயில்கள், ரெகுலர் பயணிகள் ரயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
* மலைக்கோயிலில் அன்னதானத்திற்கு நீண்ட வரிசையில் 4 மணிநேரம் காத்திருந்து உணவருந்தினர்.
* மலைக்கோயில், வின்ச் ஸ்டேஷன், பெரியநாயகியம்மன் கோயில், இடும்பன் கோயில் பகுதிகளில் இலவசமருத்துவ முகாம் நடந்தது.
* சண்முகநதி பகுதியில் போதிய போலீசார் இல்லாததால் பழநி-- - உடுமலை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
* நகராட்சி மேல்நிலைப்பள்ளி தற்காலிக பஸ் ஸ்டாண்டில், கழிப்பறைகள் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசியது.
* அடிவார பகுதியிலிருந்து ஒரு கி.மீ., துாரம் உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கு ஆட்டோ கட்டணமாக ரூ.50 வசூலித்ததால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.