பதிவு செய்த நாள்
13
பிப்
2017
11:02
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே ஆத்மலிங்கேஸ்வரர் கோயிலில் தம்பதிகள் பங்கேற்ற 1008 சிவலிங்கங்களுக்கு மஹாருத்ரஹோமம் நடந்தது. சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்துார் காம்பார்பட்டியில் மாதா புவனேஸ்வரி அம்மன் உடனுறை ஆத்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. உலக நன்மை, மழை வேண்டி நேற்று முன்தினம் காலை சண்டி ஹோமம், மாலையில் பிரத்தியங்கிரா ஹோமம் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 1008 சிவலிங்கங்களுக்கு மஹாருத்ரஹோமம்நடந்தது. குஜராத் மாநிலம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, கோவை, கடலுார் மாவட்டங்களை சேர்ந்த தம்பதிகள் மற்றும் பக்தர்கள் ஹோமத்தில் கலந்து கொண்டனர்.
கடலுாரை சேர்ந்த சிவனடியார்கள் உடலில் விபூதியிட்டு, வாத்தியங்கள் வாசித்து, ஆடி பாடினர். ஹோமம் நடந்த பகுதியில் 1008 லிங்கங்களுடன் கூடிய ஆத்மலிங் கேஸ்வரருக்கு ஆலயம் கட்டும் பணி நடக்க உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். சேலம் சாரதா சமிதி டிரஸ்ட் ஆத்மானந்த சுவாமிகள், திண்டுக்கல் சிவபுர ஆதீனம், பிரமம்ம குமாரிகள் அமைப்பு உட்பட பல ஆன்மீக அமைப்பினர் கலந்துகொண்டனர். காம்பார்பட்டியை சேர்ந்த ஸ்ரீ ல ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.