பதிவு செய்த நாள்
13
பிப்
2017
10:02
கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் குழந்தை வேலப்பருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலாக பூம்பாறையில் அமைந்துள்ள குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. நேற்று சேவல் வாகனம், நாளை அன்ன வாகனத்திலும், பிப். 14ல் மயில் வாகனத்திலும், பிப். 15ல் காளை வாகனத்திலும், பிப்.16ல் ஆட்டுகிடா, பிப்.17ல் பூத வாகனம், பிப்.18ல். சிங்க வாகனம், பிப்.19ல் யானை வாகனத்திலும் குழந்தை வேலப்பர் மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிப்.20ல் பூந்தேர் தேரோட்டமும், பிப். 21ல் குதிரை வாகனமும், கொடி இறக்கமும் நடக்கிறது. இதனை பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் இணை ஆணையர் ராஜமாணிக்கம்,உதவி ஆணையர் மேனகா தெரிவித்துள்ளனர்.