சிவகாசி: சிவகாசியில் தைபூச விழாவினை முன்னிட்டு குழந்தைகள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். சந்தி விநாயகர் கோயிலில் இருந்து சிறுவர்கள் வேலன் காவடி எடுத்து ஊர்வலத்தை துவக்கினர். அக்னி விநாயகர் கோயில், கடைக்கோயில், கருப்பசாமி கோயில், பெருமாள் கோயில், சிவன் கோயில், முருகன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், காய்ச்சல்காரம்மன் கோயில், மற்றும் மாரியம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். காவடி முன்பு பெண்கள் கோலாட்டம் ஆடி , பால்குமடம் எடுத்து சென்றனர். ஏற்பாடுகளை சாப்பாடு சாமி மாரியப்ப நாடார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.