சங்கடம் நீக்கிச் சௌபாக்கியம் தரும் சங்கடஹர சதுர்த்தி இன்று!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2017 02:02
மதுரை: நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிகமிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். அது மஹா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்த நாளில் கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும். சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.