பதிவு செய்த நாள்
15
பிப்
2017
12:02
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில், உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்படுவது வழக்கம். நேற்று உண்டியல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் இருந்த பணம், கோவிலுக்கு வந்த பக்தர்கள், மகளிர் குழுவினர் மற்றும் வங்கி ஊழியர்கள் மூலம் எண்ணப்பட்டது. இதில், 16 லட்சத்து, 50 ஆயிரத்து, 738 ரூபாய், ஒன்பது கிராம் தங்கம், 185 கிராம் வெள்ளி இருந்ததாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். உதவி ஆணையர்கள் ரமேஷ், சூரியநாராயணன் உள்பட பலர் உடனிருந்தனர்.