பதிவு செய்த நாள்
24
அக்
2011
10:10
பழநி: பழநி மலைக்கோவிலில், அக். 26ல் பழநி ஆண்டவருக்கு, காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி, ஏழு நாட்கள் நடக்கிறது.விழாவின் ஆறாம் நாளான, அக்., 31 சஷ்டி தினத்தன்று மாலை 5.30 மணிக்கு, மேல் சின்னக்குமாரசுவாமி பெரிய தங்கமயில் வாகனத்தில், கேடயம், கத்தி, வில், அம்புடன் வடக்கு கிரி வீதிக்கு எழுந்தருள்வார்.அங்கு, தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். சூரசம்ஹாரத்தையொட்டி, மாலை 3 முதல் இரவு 11 மணி வரை, மலைக்கோவில் சன்னதி அடைக்கப்படும்.