ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -3: எதற்காக இந்த திருமுகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2017 11:02
ஆதியோகி பிரதிஷ்டை, மனித விழிப்புணர்விற்கு மகத்தான ஓர் அர்ப்பணிப்பாய் இருக்கும். ஆதியோகி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான யோக முறைகளை உருவாக்கிக் கொடுத்தவர். நீங்கள் எப்படிப்பட்டவர், எங்கிருந்து வந்தவர், எந்த இனத்தைச் சேர்ந்தவர், எதனை நம்புபவர் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர் கொடுத்தது உங்களுக்கு கண்டிப்பாக வேலை செய்யும். அவர் உருவாக்கியவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தில் இருந்தோ அல்லது சில எண்ணங்களின் தொகுப்பிலிருந்தோ உருவாகவில்லை. இவை யாவும் தன்னுள் அவர் உணர்ந்தவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. ஒரு மனிதன் தனக்குள் விடுதலை அடைய என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ அவை அனைத்தையும் ஆதியோகி அளித்துள்ளார். மனிதகுலம் தன் வரையறைகளை கடந்து தன் இறுதியான உயர்ந்த ஆற்றலை அடையும், 112 வழிமுறைகளை விரிவாக ஆதியோகி வழங்கியுள்ளார்.