பதிவு செய்த நாள்
20
பிப்
2017
11:02
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை வாரிய உறுப்பினராக, இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவர், சுதா நாராயணமூர்த்தி, 66, நேற்று பதவியேற்றார். திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த, சேகர் ரெட்டி, வருவாய் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதையடுத்து, அந்த பதவியில், இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவரும், சமூக சேவகியுமான, சுதா நாராயணமூர்த்தியை ஆந்திர அரசு நியமித்தது. நேற்று அவர், ஏழுமலையான் கோவில் தங்கவாசல் அருகில், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பொறுப்பேற்றார். அவருக்கு செயல் அதிகாரி, சாம்பசிவ ராவ் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்பின், சுதா கூறியதாவது: ஆறு ஆண்டுகளுக்கு முன், ஒரு குடும்ப விழாவிற்காக திருமலைக்கு வந்தேன். தற்போது ஏழுமலையானுக்கு சேவை செய்வதற்காக, இந்த பதவியில் தேர்ந்தெடுக்கப்பட்டது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.