விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி நடந்தது. கடலுார் மாவட்ட சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று உழவாரப் பணி நடந்தது. அதில், நுாற்றுக்கால் மண்டபம், சுவாமி, அம்பாள் சன்னதி, உட்பிரகாரம், வெளி பிரகாரம் ஆகியவற்றில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பூஜை பொருட்கள், பாத்திரங்களை கழுவியும், முட்புதர்கள், குப்பைகளை அகற்றியும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. அதில், மாவட்டத் தலைவர் சாய்பிரசாத், கன்வீனர் குப்புசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.