பதிவு செய்த நாள்
22
பிப்
2017
02:02
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு பஸ்களை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முன் வந்துள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:மஹா சிவராத்திரி மற்றும் தொடர் விடுமுறையினால், நாளை மற்றும் 24ம் தேதி அன்று, 450 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பெங்களூரிலிருந்து, மாநிலத்தின் வெவ்வேறு இடங்களுக்கு செல்லும். மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, ஹாசன், மங்களூரு, சிருங்கேரி, குந்தாபுரா, ஹொரநாடு, தாவண்கரே, ஹூப்பள்ளி, கார்வார், ராய்ச்சூர், பல்லாரி, பாவகடா, ஹொசதுர்கா உட்பட, வெவ்வேறு இடங்களுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் தமிழகத்தின் மதுரை, கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூர், ஆந்திராவின் விஜயவாடா, ஹைதராபாத், விசாகப்பட்டணம் உட்பட பல இடங்களுக்கு செல்லும் சிறப்பு பஸ்கள், சாந்திநகரின் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பெங்களூரின் ஜெயநகர் நான்காவது பிளாக், ஒன்பதாவது பிளாக், விஜயநகர், ஜெ.பி.நகர், ஜாலஹள்ளி கிராஸ், நவ்ரங், மல்லேஸ்வரம், கெங்கேரி போன்ற இடங்களிலிருந்தும் பஸ் போக்குவரத்துக்கு வசதி செய்யப்பட்டுள்ளது ஹூப்பள்ளி, தார்வாட், பெலகாவி, சிர்சி, கார்வார் உட்பட இதர பகுதிகளுக்கு செல்ல, முன் பதிவு செய்யப்பட்ட பஸ்கள், மைசூரு ரோட்டின் சாட்டிலைட், மெஜஸ்டிக் பஸ் நிலையங்களிலிருந்து புறப்படும் கலபுரகி, ராய்ச்சூர், ஹொசபேட்டை, யாத்கிர், பீதர் போன்ற பகுதிகளுக்கு செல்ல, முன் பதிவு செய்யப்பட்ட பஸ்கள், பசவேஸ்வரா பஸ் நிலையத்திலிருந்தும், மெஜஸ்டிக் பஸ் நிலையத்தி லிருந்தும் புறப்படும்நான்குக்கும் மேற்பட்ட பயணிகள், ஒன்றாக டிக்கெட் முன் பதிவு செய்தால், டிக்கெட் கட்டணத்தில் ஐந்து சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். செல்வதற்கும், வருவதற்குமான டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்கு, 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.டிக்கெட்டுகளை, www.ksrtc.in என்ற இணைய தளத்தில் முன் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.