விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம் முதலைக்குளம் கம்ப காமாட்சியம்மன், கருப்பசாமி கோயிலில் மகாசிவராத்திரி மாசிகளரி உற்சவம் பிப்.,21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பிப்.,24 முதல் மார்ச் 2 வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கொசவப்பட்டி மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராமமக்கள் அன்னதான விழாக்குழுவினர் செய்துள்ளனர்.