திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். கடந்த, 6ல் கும்பாபி?ஷகம் நடந்த நிலையில், நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், 96 லட்சத்து, 96 ஆயிரத்து, 246 ரூபாய், 244 கிராம் தங்கம், 210 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.