Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மயான கொள்ளை விழா: ... ஈங்கூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் குண்டம் விழா ஈங்கூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலத்தில் மயான கொள்ளை: ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
சேலத்தில் மயான கொள்ளை: ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

27 பிப்
2017
11:02

சேலம்: சேலத்தில், மாசி அமாவாசை மயான கொள்ளை திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடு, கோழிகளை கடித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசி அமாவாசை நாளில், சேலத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்து, அம்மன் விக்ரகங்கள், சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டு, மயான கொள்ளை எனப்படும் பூஜைகள் நடத்தப்படும்.இதன்படி, சேலம், காக்காயன் சுடுகாடு, செவ்வாய்ப்பேட்டை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுடுகாடுகளில், நேற்று காலை, 11:00 மணி முதல், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேளதாளம் முழங்க, பெரியாண்டிச்சி அம்மன் விக்ரகங்களுடன், பல்வேறு வேடங்கள் அணிந்து, கழுத்தில், ஆடு, கோழி குடல்களை அணிந்தபடியும், மண்டை ஓட்டை கவ்வியும், ஆக்ரோஷமாக பக்தர்கள் ஆடி வந்தனர்.அருள் வந்து ஆடியவர்கள் வாய்களில், கோழிக்குஞ்சுகள், ஆட்டு குட்டிகள் ஆகியவற்றை திணித்தனர். அவற்றை, ரத்தம் சொட்ட சொட்ட கவ்வியபடி, சுடுகாடு நோக்கி படையெடுத்தனர். அப்போது, பெண்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், குழந்தைகள் என, திரளான மக்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சாலையில் படுத்தனர். அவர்களை தாண்டி சென்று, அருள் வந்து ஆடியவர்கள் ஆசி வழங்கினர். காக்காயன் சுடுகாட்டில், 3, 5 வயதுடைய இரு சிறுமியர், வேடம் அணிந்து, நாக்கை வெளியே துருத்தியபடி, ஆடி வந்தனர். ஏராளமான பக்தர்கள், அவர்கள் காலில் விழுந்து, ஆசி பெற்றனர்.சேலம் மாவட்ட சுடுகாடுகளில், 10 ஆயிரம் கோழி குஞ்சுகள், 2,000 ஆட்டு குட்டிகளை கடித்து, ரத்தம் குடிக்கப்பட்டது. மாலை, 4:00 மணி வரை, அனைத்து சுடுகாடுகளிலும், இந்நிகழ்ச்சி நடந்தது.இதேபோல, வேலுார், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும், இத்திருவிழா கோலாகலமாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar