பதிவு செய்த நாள்
27
பிப்
2017
12:02
பல்லடம் : பல்லடம், அங்காளம்மன் கோவிலில், 42வது குண்டம் திருவிழா கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடனை செத்தினர். அங்காளம்மன் கோவிலில், 23ம் தேதி துவங்கிய விழாவில், மாவிளக்கு, திரு விந்தை அலகு தரிசனம், அக்னி குண்டம் வளர்த்தல் நடைபெற்றது. நேற்று குண்டம் இறங்குதல் விழா நடந்தது. பல்லடம் வட்டாரத்திள்ள பெண்கள், சிறுவர்கள் என, நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி வழி பட்டனர். இன்று காலை, 10.00 மணிக்கு கொடி இறக் குதல், மஹா அபிஷேகம், அம்பாள் திருவீதி உலா மற்றும் வஸந்த விழா நடைபெற உள்ளன. · காங்கயம் அருகே மடவிளாகத்தில், 91வது மகா சிவராத்திரி அக்னி பூக்குண்ட விழா கடந்த, 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ம் தேதி மயான பூஜை செய்யப்பட்டு, மகா சிவராத்திரி பூஜை நடந்தது. நேற்று அதிகாலை அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்து, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை, 7:00 மணிக்கு கொடி இறக்குதல், சக்தி பூஜையும் நடக்கிறது.