மார்ச் 14 – ஏப்ரல் 13 வரையுள்ள காலம் பங்குனி. இந்நாளில், பள்ளி, கல்லூரிகளில் ஆண்டுத்தேர்வு நடக்கிறது. இதற்கு காரணம் தெரியுமா? சூரியன் நவக்கிரகங்களில் முதலாமவராகவும், நவக்கிரக மண்டபத்தில் நடுநாயகராகவும் உள்ளார். இவர் தன் ஆசிரியராகிய குருவுக்கு, கட்டுப்பட்டவராக உள்ளார். தனது குருவின் வீடான மீனத்திற்கு வரும் மாதத்தை பங்குனி என்கிறோம். மற்ற மாதங்களில் இவர் செய்த பணிகளை தன் குருவிடம், நான் சரியாக செய்துள்ளேனா என சுயபரிசோதனை செய்வதாக இதைக்கொள்ளலாம். ஆண்டு முழுவதும் படித்த பாடத்தை, மாணவர்களும் குருவிடம் எழுதிக்காட்டி, தேர்ச்சி பெற்று விட்டோமா என பரிசோதித்துக் கொள்கிறார்கள். எனவேதான் பங்குனியில் ஆண்டு தேர்வை வைக்கிறார்கள். அதுமட்டுமல்ல! நிறுவனங்களில் இறுதிக்கணக்கு கூட இந்த மாதத்தில் பார்க்கப்பட்டு, லாப நஷ்டக்கணக்கு பார்க்கப்படுகிறது. குருவுக்குரிய இன்னொரு வீடு தனுசு. இது மார்கழியில் (டிசம்பர்) வருகிறது. அந்த மாதத்தில் சூரியன் தனுசு ராசிக்கு வருகிறார். அதுவரை படித்த பாடங்களை அரையாண்டு தேர்வாக மாணவர்கள் எழுதுகின்றனர்.